இத்தாலியன் ஹாட் சாக்லேட் (Italian Hot Chocolate)

தேவையான பொருட்கள்:

பால் – 1 1/2 கப்
சோள மாவு – 1/2 டீஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் சாக்கோ சிப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் சாக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெடி!!!
குறிப்பு: * வேண்டுமானால் இந்த ஹாட் சாக்லேட்டுடன் 1/4 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
* இதில் சேர்க்கப்பட்டுள்ள சோள மாவு, இந்த பானத்தை கெட்டித்தன்மைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஹாட் சாக்லேட் சற்று கெட்டியாக வேண்டுமானால், சற்று அதிகமாக சோள மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த ஹாட் சாக்லேட் பானத்தை முழுமையாக குறைவான தீயில் செய்யுங்கள்.
 Italian Hot Chocolate
Required things:
Milk - 1 1/2 cups
Cornstarch - 1/2 tbsp
Sacco Chips - 3 tablespoons
Honey - 1 tbsp
Sugar - 1 tbsp
Cocoa powder - 1 tbsp
Method:
Mix the corn flour with milk first. Heat it in a skillet, then add choco chips and honey, stirring constantly on low flame. When the choco chips are completely dissolved, add the sacco powder and sugar and bring to a boil, turn off the stove and pour into the dumplings, Italian hot chocolate ready !!!
Note: You can add 1/4 teaspoon vanilla essence to this hot chocolate if desired.
* Included corn flour, this beverage is added for hardness. If you want hot chocolate a little thicker, you can add a little more corn flour.
* Make this hot chocolate drink on a completely low fire.

Comments