உங்களுக்கு தெரியுமா! சுண்டைக்காயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது?

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு நல்லது.
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் 
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது தெரியாது

Comments