அவல் போண்டா எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்:


  • தேவையான பொருட்கள் :
  • அவல் – ஒரு கப்
  • உருளைக்கிழங்கு – ஒன்று
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • கரம்மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் – 200 கிராம்
  • உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். 
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத் தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும். 
சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா ரெடி.

Comments