ஜலதோஷத்தில் இருந்தும் காக்க

கடலை மாவு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து கூழாக்கி, அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு, பிறகு நன்கு கழுவிவந்தால்… முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம்.


சீரகம், ஓமம், மிளகு இவற்றை வறுத்து… பெருங்காயம், சுக்கு சேர்த்துப் பொடி செய்யவும். எந்த சுண்டலாக இருந்தாலும், இறக்குவதற்கு முன் இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவிக் கிளறி பயன்படுத்தினால், வாயுக் கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கும்.
கேரட் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், ரத்தசோகை நீங்கும்; ரத்தம் விருத்தியடையும்.
ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் விரல்களைச் சிறிதுநேரம் வைத்திருந்தால், நகம் உடையாமலிருக்கும்.
வேப்பிலை, கறிவேப்பிலையை சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அந்த நீரைக் கொண்டு தலையை அலசினால். பேன் இருக்காது: முடி கருமையாகும்; முடி உதிர்தலைத் தடுக்கும்.
வெள்ளைப் பூண்டை அரைத்து, பூச்சி, வண்டு கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால்… வீக்கம், வலி குறையும்.
தேநீர் தயாரிக்கும்போது துளசி இலைகளைச் சேர்த்தால், தேநீர் மணமாக இருக்கும்; ஜலதோஷத்தில் இருந்தும் காக்கும்.

Comments