சீனி அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை : /

  • Step 1.

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீனி அவரைக்காயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும்.
  • Step 2.

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும். குக்கரில் சீனி அவரைக்காயை போட்டு லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
  • Step 3.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வெந்த சீனி அவரைக்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.இவற்றுடன் புளிக் கரைசலை ஊற்றி காய் நன்றாக வதங்கியதும் இறக்கவும்.சுவையான சீனி அவரைக்காய் பொரியல் தயார். .

Comments