தனியா-மிளகு-சீரகப்பொடி செய்வது எப்படி

தனியா-மிளகு-சீரகப்பொடி

தேவையானவை: 

தனியா - 4 டேபிள்ஸ்பூன், 
மிளகு - 10, 
சீரகம் - 4 டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 2, 
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

வெறும் கடாயில் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்கவும். இதை, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இந்தப் பொடியை, ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பொடி சேர்த்து, எண்ணெய், நெய் கலந்து சாப்பிடலாம்.

Comments