குல்பி ஐஸ்க்ரீம் செய்யும் முறை




தேவையான பொருட்கள் :

பால் - 2 லிட்டர்
பாதாம் - 15 கிராம்
பிஸ்தா - 15 கிராம்
முந்திரி - 15 கிராம்
கார்ன்ப்ளேவர் - 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் - 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஐசிங் சுகர் - 200 கிராம்

செய்முறை :


முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக் 
காய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும்.

பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில்வைத்து கிளறவும்.

நன்கு கெடியானதும் இறக்கவும்.

பாதம்,முந்திரி,பிஸ்தாவை த்ண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

ஜெலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

Comments