குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உணவுகள்

எள்ளு

மிகவும் மெலிதான எடை உள்ளவர்களுக்கு எள்ளு கைகொடுக்கும். இவர்கள் இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை சிறப்பாக அதிகரிக்கும். எள்ளு சட்னி ,எள்ளுப்பொடி ,எள்ளுருண்டை போன்ற உணவுகளை இதிலிருந்து தயாரிக்க முடியும். எள்ளு ஒரு சுவையான உணவுப் பொருளும் கூட! ‘இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது நம் முன்னோர்களின் வார்த்தை என்பதை மறக்க வேண்டாம்.

சால்மன் மீன்

இந்த மீன்களில் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. ஆக இதை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த மீன்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.

அவகேடோ பழங்கள்

இந்த பழங்களில் கலோரிகள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவு காணப்படுகின்றன. மற்ற உணவுகளைப் பொறுத்தவரையில் சமைத்துச் சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் இது மாதிரியான பழங்களை எளிதாகச் சாப்பிட முடியும். தினம் ஒரு அவகேடோ பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

Comments