சப்பாத்தி ஸ்வீட் செய்வது எப்படி ?

சப்பாத்தி சில சமயங்களில் ஹார்டாக செய்து விட்டால் மீந்து விடும். அதனை தோசைக்கல்லில் போட்டு முறுக்கு மாதிரி மொறுமொறுப்பாக சுட்டெடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த மாவைப்போல ஒ‌ன்றரை மடங்கு சர்க்கரையை பாகு போல காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும் அதில் பொடித்த சப்பாத்தி, நெய், முந்திரி, ஏல‌க்கா‌ய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு‌க் கொடுங்கள். பிளேட்டில் இருந்த ஸ்வீட் எங்கே என்று கேட்பீர்கள்?

Comments