சூப்பரான சிக்கன் ஹலீம் செய்வது எப்படி

சூப்பரான சிக்கன் ஹலீம்!!
1528115525805.png

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
கோதுமை - 2 கப்
வெங்காயம் - 3
துவரம் பருப்பு - 1/2 கப்
பட்டை - 2
பிரியாணி இலை - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
புதினா - 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்துகொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் கடாயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் கோதுமையை போட்டு, அதில் 6 கப் தண்ணீர் விட்டு, 1/2 மணி நேரம் நன்கு கோதுமை மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

பிறகு அதில் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகுதூள், சீரகப் பொடி மற்றும் 1/2 மணி நேரம் கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

இந்த மசாலாவை கோதுமை கலவையில் போட்டு நன்றாக கலக்கவும். அனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி விட்டு எலுமிச்சை சாற்றை அதில் பிழிந்து விட்டு ஒரு முறை கிளறி பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் ஹலீம் ரெடி.

Comments