Skip to main content
வெந்தயக்கீரை வடை செய்வது எப்படி ? Fry the dill
தேவையான பொருட்கள்:
- வெந்தயக்கீரை - 2 கட்டு
- பச்சைமிளகாய் - 4
- இஞ்சி - சிறிதளவு
- பூண்டு - சிறிதளவு
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- சர்க்கரை - 1½ டீஸ்பூன்
- தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
- கோதுமை மாவு - 1 கப்
- கடலை மாவு - 1/2 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- எள் - 1 டீஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- எண்ணெய் - தேவைக்கு
- செய்முறை:
- வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையைப் போட்டு அதனுடன் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு,பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள் மற்றும் உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு கடாயில் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும். வெந்தயக்கீரை வடை ரெடி.
Comments
Post a Comment