தேவையான பொருட்கள்
பூண்டு - 10-12 பற்கள்சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - பாதி அளவு (பொடியாக நறுக்கவும்)
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - அரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு:
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 3-4 பற்கள்
காய்ந்த மிளகாய் - ஒன்று
தக்காளி – பாதி அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்குக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி இறக்கி, குளிரவைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, பேஸ்ட் செய்து தனியாகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் தாளிக்க வேண்டும். பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வாக்கி, பின் நறுக்கிவைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளிச்சாற்றைச் சேர்த்துக் கிளறி, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி, பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 10-15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பூண்டு குழம்பு தயார்.
Comments
Post a Comment