
- புதினா – ¼ கப்
- இஞ்சி – தேவையான அளவு
- மோர் - 3 கப்
- கடுகு - சிறிதளவு
- ஓமம் - சிறிதளவு
- பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு,
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
INSTRUCTIONS
புதினாவை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் புதினாவை வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கிப் பரிமாறவும்.
Comments
Post a Comment