தந்தூரி டீ செய்முறை (Tandoori Chai)

தேவைப்படும் பொருட்கள்:

  1. பால் – இரண்டு கப்
  2. டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
  3. சர்க்கரை – நான்கு ஸ்பூன்
  4. இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  5. ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
  6. சிறிய மண் கலயம் – ஒன்று

தந்தூரி டீ செய்முறை (Tandoori Chai):

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அதன்பிறகு இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின்பு நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுப்பை இப்போது மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நாம் மண் கலயத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதாவது மண் பானையை 20 நிமிடங்கள் வரை நல்ல அடுப்பை வேகமாக எரியவைத்து பானையை சூடு படுத்தி வைத்து கொள்ளவும்.
பின்பு தந்தூரி டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும்.

அவ்வளவுதான் தந்தூரி டீ தயார். சிறிது நேரம் கழித்த பிறகு இந்த டீயை வேறொரு பாத்திரத்தை மாற்றி கொள்ளுங்கள்.
இந்த சுவையான தந்தூரி டீ அருந்துங்கள்.

Comments