தேவையானவை
கேரட் விழுது- 2 கப்
லிட்டில் மொப்பெட் வெல்லம் – தேவைக்கேற்ப
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி- ஒரு சிட்டிகை
லிட்டில் மொப்பெட் உலர்தானிய பொடி (Dry Fruits Powder) – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
வாணலியில் நெய் விட்டு அரைத்த கேரட் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
.கேரட் வதங்கியவுடன் ஆர்கானிக் லிட்டில் மொப்பெட் வெல்லம் சேர்த்து கிளறவும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய்த் தூள், உலர்தானிய பொடி சேர்த்து கிளறவும்.
பலன்கள்
கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் (வைட்டமின் ஏ) சத்து குழந்தைகளின் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.நார்ச்சத்துகள் உள்ளதால் குழந்தைகளின் செரிமானக் கோளாறு நீங்கும்.
மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
சருமத்துக்கு நல்லது
உலர்தானியப் பொடி சேர்ப்பதால் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
Comments
Post a Comment