குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல் செய்வது எப்படி ?




பிரெட் ஃப்ரூட் ரோல் 

தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ்,

பொடியாக நறுக்கிய ஆப்பிள் – 2 டீஸ்பூன்,


நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா – 2 டீஸ்பூன்,


முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன்,


மில்க்மெய்ட் – 5 டீஸ்பூன்,



தேன் – சிறிதளவு,

சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப.


செய்முறை:

முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும்.

பிரெட் மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி நடுவில் கொஞ்சம் பழக்கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும்.


பிரெட்டை சில்வர் பேப்பர் மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


 பிரெட் ஃப்ரூட் ரோல் ரெடி.

Comments