ஆரஞ்சு குழம்பு செய்வது எப்படி ?

ஆரஞ்சு குழம்பு

 தேவையானவை:-

ஆரஞ்சு பழத் துண்டுகள் ஒரு கப் (தோல், கொட்டைகளை நீக்கவும்)
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் தலா சிட்டிகை
கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு
புளி எலுமிச்சையளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளிக்கவும்.
பின்னர் ஆரஞ்சுப்பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கலவை நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
சாதம் மற்றும் பொங்கலுக்கு ஏற்ற குழம்பு இது.

Comments