கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு வைப்பது எப்படி?

கறிவேப்பிலைக் குழம்பு
INGREDIENTS
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகு 10
காய்ந்த மிளகாய் 2
உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
சீரகம் ஒரு டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் 100 மில்லி
உப்பு தேவையான அளவு

INSTRUCTIONS

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தனியாக வதக்கவும்.
பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும்.
மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
NOTES 
கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும், உடலை வலுவாக்கும், குடல் வாயுவை வெளியேற்றும். மேலும், இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு.

Comments

Post a Comment