சுவையான பருப்பு போளி செய்வது எப்படி ?

சுவையான பருப்பு போளி
தேவையானவை:


கடலைப்பருப்பு – 500 கிராம்,
சர்க்கரை – 850 கிராம்,
டால்டா – 300 கிராம்,
மைதா மாவு – 500 கிராம்,
ஜிலேபி ஃபுட் கலர் – 1/4 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்,
நெய் – 50 கிராம்,
டால்டா – 3 மேசைக்கரண்டி.

செய்முறை:


கடலைப் பருப்பை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும்.
ஒன்று இரண்டாக வெந்த பிறகு, அதிகப்படியான தண்ணீரை ஈர்த்துவிட்டு அதனுடன் சர்க்கரையை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் 300 கிராம் டால்டாவை சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும். பருப்புக் கலவை கடாயில் ஒட்டாமல் பந்து போல் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி டால்டா, மைதா மாவு, ஜிலேபி கலரை தண்ணீரில் கரைத்து அதையும் மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
கடைசியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். 

பருப்புக் கலவையை ஓர் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டவும். அதில் பாதி அளவு மாவினை உருட்டி வைக்கவும்.

மாவை பூரி திரட்டுவது போல் திரட்டி, அதனுள் பருப்புக் கலவையை வைத்து, நன்கு மடித்து, மறுபடியும் மெதுவாக திரட்டி, தோசை கல்லில் நெய் சேர்த்து சுடவும். சூடாக சாப்பிடவும்

Comments