குழந்தைகளுக்கு சாக்லேட் சமோசா தயார் செய்வது எப்படி?

சாக்லேட் சமோசா

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க:

ரிஃபைண்டு ப்ளோர் – 1 கிலோ

நெய் – தேவையான அளவு

ஏலக்காய் – சிறிதளவு

ஸ்டஃப் செய்ய:

சாக்லேட் – 500 கிராம்

பாதாம் – 250 கிராம்

முந்திரி – 250 கிராம்

பிஸ்தா – 100 கிராம்

சர்க்கரை – 1 கிலோ

கரம் மசாலா பொடி – கால் டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பாதாம், முந்திரியை வறுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரிஃபைண்டு ப்ளோர் மாவு, சிறிதளவு நெய் மற்றும் ஏலக்காய் விதை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவில் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

சமோசா உள்ளே ஸ்டஃப் செய்ய முதலில் சாக்லேட்டை உருக்கி வைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸை சேர்த்து கொள்ளவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.

அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.

அனைத்து ஓரங்களையும் நன்றாக மூடி வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சமோசா பாதி அளவு வெந்தபின் வெப்பத்தை அதிகரித்து மொறுமொறுப்பாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

இப்போது சூடான சாக்லேட் சமோசா தயார்.

Comments