பால் பொருட்கள்
பால் பொருட்களில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் சத்து ,புரதச் சத்து , பல்வேறு விட்டமின்கள் மற்றும் கால்சியம் அதிக அளவு காணப்படுகின்றன. பால் , வெண்ணெய் ,தயிர் ,பாலாடைக் கட்டிகள் முதலியன பால் பொருட்களில் அடங்கும்.
உடல் எடையை அதிகரிக்க இவற்றைச் சாப்பிடுவது உகந்தது.
உடல் எடையை அதிகரிக்க இவற்றைச் சாப்பிடுவது உகந்தது.
அரிசி
அரிசியில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்து காணப்படுகின்றன. உடல் எடையை கூட்ட வேண்டும் என்று தீர்மானத்தில் உள்ளவர்கள் அரிசி சாப்பாடு சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி சாப்பிட இன்னும் உகந்தது.
கிழங்கு வகைகள்
கிழங்கு வகைகளில் சரியான அளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. இந்த சத்து உடல் எடையைக் கூட்ட உதவும். ஆக உணவில் உருளைக் கிழங்கு ,சர்க்கரைவள்ளிக் கிழங்கு ,சேனைக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்வது உகந்தது.
பருப்புகள்
பாதாம் பருப்புகள், முந்திரிப் பருப்புகள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளன. இந்த பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் கட்டாயம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இறைச்சி
உடல் எடையை அதிகரிக்க வைப்பதில் அசைவ உணவு பெரும் பங்கு ஆற்றுகின்றன. ஆட்டு இறைச்சி ,கோழி இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லை காடை,கௌதாரி,பன்றி,முயல் , இறால் போன்ற எந்த வகை அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.
பீன்ஸ்
இந்த காயில் அதிகளவு புரதச்சத்து காணப்படுகின்றன. சுமார் 300 கிராம் கலோரிகள் இதில் உள்ளன. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி அதிக அளவு சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உண்பது உகந்தது .இதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெய்
பொதுவாகவே எண்ணெய்கள் அதிக அளவு கொழுப்புச் சத்துகளைக் கொண்டன. அந்தவகையில் ஆலிவ் எண்ணெய்யில் அதிக அளவு கலோரிகளும் உள்ளன இந்த எண்ணெய் கொண்டு உணவு தயாரித்துச் சாப்பிடுவது நல்லது. உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலையெண்ணெய், தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் முதலிய அனைத்து எண்ணெய்களும் உடல் எடை அதிகரிப்புக்கு உகந்தன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்து உள்ளன.தினமும் இரண்டு அல்லது மூன்று வாழைப்பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். குறிப்பாக நேந்திர பழத் துண்டுகளைத் தேனுடன் சேர்த்து தினமும் எடுத்துக் கொள்வது உகந்தது. இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இது உடல் எடையை அதிகரிக்கப் பெரிய அளவில் உதவி புரியும் .
உளுந்து
உடல் எடையை அதிகரிக்க உளுந்து கைகொடுக்கும். குறிப்பாகப் பெண்கள் உளுந்து சேர்த்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது மிகவும் ஏற்றது. உளுந்து வடை , உளுந்து கஞ்சி போன்றவற்றைத் தயாரித்துச் சாப்பிடலாம்.
தேங்காய்
தேங்காயில் நிறைவான அளவு கொழுப்புச் சத்து உள்ளது. பொரியல் ,சட்னி , பலகாரங்கள் போன்ற உணவுகளில் தேங்காய் சேர்த்துப் பலனடையலாம். அதேபோல வாரம் இரண்டு முறை தேங்காய்ப் பால் தயாரித்துச் சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடை ஏற தொடங்கும்.
டார்க் சாக்லேட்
இதில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளன. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளவர்களுக்கு இது உகந்தது.
ராகி
உடல் எடையை அதிகரிக்க ராகி துணைபுரியும். ராகி கஞ்சி ,ராகி முறுக்கு ,ராகி தோசை என்று பலவிதமான உணவுப் பொருட்களை இதன் மூலம் தயாரிக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை ஏறும்.
Comments
Post a Comment