வீட்டு/சமையல் குறிப்புகள்
- புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்பதற்கு அழகாக இருக்கும்.
- சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
- நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு தேக்கரண்டி உப்பை நீரில் கலந்து அதில் நகைகளை போட்டு சிறிது நேரம் ஊற விடவும். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால் நகைகளில் உள்ள அழுக்குகள் போய் விடும்.
- ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
- முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும்.
- எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும்.
- முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
- டைல்ஸ்க்கு இடையில் இருக்கும் அழுக்கை போக்க பிளீச்சிங் பவுடர் சிறிது எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி பட்ஸ் கொண்டு அழுக்கு இருக்கும் இடங்களில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு துடைத்தால் பளிச்சென்று ஆகி விடும். டைல்ஸ்சையும் இதே முறையில் சுத்தப்படுத்தலாம்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
- நாம் தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிசசென்று ஆகி விடும்.
Household / Cooking Tips
1. Put the stitched jammie in the rubber ball with a rubber ball and glue it all over the ball. Or you can put it in the glass cupboard. Looks beautiful.
2. Boil the rice and lentils about 1/2 hour before cooking and cook quickly.
3. To remove the dirt in the jewelry, mix one tablespoon of salt with water and let it soak for a while. Then rub with a soft brush to get rid of the dirt in the jewelry.
4. When pickled, lightly fry the salt so that the white color of the pickles does not.
5. When boiling the egg, add 2 drops of vinegar to the water and boil the egg.
6. To remove the stain in the Eversilver bowl, rub the area with a little tamarind.
7. Wipe the face mirror with old news paper and the glass will become bright.
8. To get rid of the dirt between the tiles, take a little bit of bleaching powder and add water to it. Tiles can also be cleaned in a similar way.
9. To make the ginger garlic paste, you can add a little more than the ginger.
10. The utensils we use daily are soaked in soapy water for an hour and then washed and the dish becomes flaky.
Comments
Post a Comment