மட்டன் எலும்பு சூப்
என்னென்ன தேவை?
எலும்புத் துண்டுகள் - கால் கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சய்தூள் - அரை ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் எலும்பு துண்டுகளை நன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது, மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு தண்ணீர் வைத்து வேக வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு சிவந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் எலும்புச் சாற்றை ஊற்றவும். எலும்புச் சாறு நன்கு கொதித்து மணமாக வரும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளைத் தூவி இறக்கவும்.
Comments
Post a Comment