ஆவியில் வேக வைத்த தோசை தயாரிப்பது எப்படி?

ஆவியில் வேக வைத்த தோசை தயாரிப்பது எப்படி?

தேவையானவை:
தோசை மாவு – ஒரு கரண்டி
நெய்  – ஒரு டீஸ்பூன்


முறை 1:
இட்லி அரிசி – 4 கப்
முழு உளுந்து –  ஒரு கப்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்


அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும். ஒருவேளை முழு உளுந்து உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் பாதியாக உடைத்த உளுந்தை பயன்படுத்துங்கள்.
முதலில் உளுந்தை நன்றாக அரைத்துவிட்டு அதன்பிறகு அரிசியை அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
மாவு பொங்கி வரும் என்பதால் இதனை பெரிய அளவிலான பாத்திரத்தில் வைக்கவும். மிதமான வெப்பநிலை உள்ள இடத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து மாவு நன்றாக பொங்கி வந்த பிறகு பயன்படுத்தவும்.


முறை 2:
இட்லி அரிசி கிடைக்கவில்லை என்றால் சாதாரண அரிசியை பயன்படுத்தலாம்.



அரிசி – 3 கப்
உளுந்து – 1 கப்
அவல் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்


அரிசியை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
உளுந்தை சாதாரண நீரில் ஊறவைத்து மேற்கண்ட முறையை பின்பற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அவலை ஊறவைத்தால் போதுமானது
தோசை செய்முறை:
தோசை செய்வதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் சாப்பிடும் பாத்திரங்கள் அனைத்தையும் வெந்நீரை கொண்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி மாவை சிறிய அளவில் வட்டமாக ஊற்றிக் கொள்ளுங்கள்.

தோசையில் துளைகள் வரும் போது நெய்யை ஊற்றி மேலாக ஊற்றி அதனை மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் ஆனபிறகு மூடியை எடுத்துவிட்டால் மிருதுவான தோசை கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தோசையை முதலில் கொடுக்கும் போது வெந்நீரை கலந்து மசித்து தரலாம். 7 மாதங்களுக்கு பிறகு சட்னி பொடி அல்லது தக்காளி வெங்காய சட்னி ஆகியவையுடன் சேர்த்து தோசையை கொடுக்கலாம்…

Comments