நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

தேவையானவை .-

நாட்டுக்கோழி கறி – 500 கிராம்
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 100 மில்லி
இஞ்சி சாறு – 100 கிராம்
மஞ்சள் தூள் – 3 தேக்கரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
கறி மசாலா பொடி – சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை .-

கோழி துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். சுத்தம் செய்த கோழி துண்டுகளோடு   மசாலா பொடி சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

இஞ்சியை தோல் சீவி அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

அடுத்ததாக  அடுப்பில் கடாயை வைத்து, கொத்தமல்லி ,கறிமிளகாய், கறிமசாலா பொடி எல்லாத்தையும் எண்ணெய்க்கு போட்டு பொன்னிறமாக வதக்கி , கலக்கி  வைத்த மிளகாய் கரைசலை ஊற்றி,  ஊறவைத்த கோழி துண்டுகளையம் போட்டு நன்றாக வெந்தவுடன் மல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான சத்தான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் தயார்

Comments