காளான் கிரீம் சூப்
தேவையானவை:
காளான் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய பூண்டு - 2 பல்
பிரிஞ்சி இலை - ஒன்று
தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
வொயிட் சாஸ் - 100 மில்லி
வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு:
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மைதா - 3 டேபிள்ஸ்பூன்
பால் - அரை லிட்டர்
உப்பு - சிறிதளவு.
செய்முறை:

வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
Comments
Post a Comment