கேரட் சாதம்
கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 ஸ்பூன்
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்
கறிவேப்பிலை- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 5
நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 6
சீரகம்- 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம்- 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.
இன்னொரு கடாயில் வறுக்கக் கொடுத்தப் பொருட்கள வறுத்து மிக்சியில் போட்டு ஒரு அடிஅடித்து வைக்கவும். கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.
கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.
Comments
Post a Comment