மின்ஸ்டோன் சூப்

மின்ஸ்டோன் சூப்

தேவையானவை:
கேரட் - ஒன்று,
பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பிரிஞ்சி இலை - ஒன்று,
செலரி, தைம் இலை, பாஸில் இலை
துருவிய சீஸ் - சிறிதளவு,
டர்னிப் - ஒன்று,
தக்காளி - 3,
பூண்டு - 2 பல்,
ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 பாஸ்தா - ஒரு கப் (வேக வைத்தது),
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:
தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

Comments