ஃபிரைடு ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப்,
ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ்,
மைதா – 1/2 கப்,
தண்ணீர் – தேவைக்கு,
பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப்,
சாக்லெட் சாஸ் – 3-4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை :

மைதா, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸை நொறுக்கி கொள்ளவும்.கேக் அல்லது பிரெட் உருண்டைகளை மைதாவில் முக்கி, பிரெட் கிரம்ஸில் புரட்டி ஃப்ரீசரில் வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும். கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் காயவைத்து, ஐஸ்கிரீம் உருண்டைகளாக 2-3 நிமிடத்திற்குள் பொன்னிறமாக பொரித்தெடுத்து சாக்லெட் சாஸுடன் அலங்கரித்து பரிமாறி, உடனே சாப்பிடவும்.
குறிப்பு: சாக்லெட்டை டபுள் பாயிலிங் அல்லது மைக்ரோவேவ் அவனில் வைத்து உருக்கவும். தேவையானால் வெண்ெணய் சேர்த்து உருக்கவும். சாக்லெட் சாஸ் ரெடி.
Comments
Post a Comment