மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மலபார் மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன்
சின்னவெங்காயம் - 3
தக்காளி - 2
சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்ப்பால் - ஒரு கப் (கெட்டியான)
தேங்காய்ப்பால் - ஒரு கப் (தண்ணியான)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

 வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

அடுத்து அதில் தண்ணியான தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மலபார் மீன் குழம்பு ரெடி.

Comments