காய்கறி சூப்

காய்கறி சூப்

தேவையானவை: பீன்ஸ் - 10
கேரட் - ஒன்று
கோஸ் - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
வெண்ணெய்
மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
பால் - ஒரு சிறிய கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.
இதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் உப்பைப் போட்டு நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

Comments